'ஜெட் ஏர்வேஸ்' நிறுவனர் நரேஷ் கோயல் அமலாக்க துறை விசாரணைக்கு ஆஜர்

Added : மார் 21, 2020
Share
Advertisement

மும்பை:தனியார் துறையைச் சேர்ந்த,'யெஸ் பேங்க்' நிறுவனர் ராணா கபூர் மீதான, சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில், 'ஜெட் ஏர்வேஸ்' நிறுவனர், நரேஷ் கோயல், நேற்று அமலாக்கத் துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆஜரானார்.
ராணா கபூர், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு, 550 கோடி ரூபாய் கடன் அளித்து, பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக, குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த கடன், வாராக் கடனாக மாறிஉள்ளது. இது தொடர்பாக, கடந்த, 18ம் தேதி விசாரணைக்கு வருமாறு, நரேஷ் கோயலுக்கு, அமலாக்கத் துறை, 'சம்மன்' அனுப்பியிருந்தது. ஆனால், 'உடல் நலம் சரியில்லை' என கூறி, அன்று நரேஷ் கோயல் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி, மும்பை அமலாக்கத் துறை அலுவலகத்தில், நரேஷ் கோயல் நேற்று ஆஜரானார். அவரிடம், ராணா கபூருக்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பாக, அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
ஏற்கனவே, நரேஷ் கோயல் மீது, சட்ட விரோத பணப் பரிமாற்றம், அன்னியச் செலாவணி விதிமீறல் தொடர்பாக, அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. நிதி நெருக்கடியால், 2019, ஏப்ரலில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மூடப்பட்டது. அதற்கு முன், அதன் தலைவர் பதவியில் இருந்து நரேஷ் கோயல் விலகினார். அவர் மீது, வெளிநாடுகளில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களில் முதலீடு செய்தது தொடர்பான வழக்குகள் உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X