பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா எச்சரிக்கை குறித்து அலட்சியம்: வழக்கம்போல் பொது மக்கள் கூடும் அவலம்

Added : மார் 21, 2020
Share
Advertisement
 கொரோனா எச்சரிக்கை குறித்து அலட்சியம்:  வழக்கம்போல் பொது மக்கள் கூடும் அவலம்

விருத்தாசலம்: கொரோனா பாதிப்பு குறித்த விழிப்புணர்வு இல்லாமல், பொது மக்கள் வழக்கம்போல் கூடுவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி தீவிரமாக நடக்கிறது.

பத்து பேருக்கு மேல் கூட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக பெரு வணிக நிறுவனங்கள், வழிபாட்டு தலங்களை மூடவும், மீறுவோர் மீது வழக்குப்பதிவு செய்வது போன்ற நடவடிக்கைகள் தீவிரமாக நடக்கிறது.இந்நிலையில், இன்று (22ம் தேதி) நாடு முழுவதும் கொரோனா பாதிப்பை தவிர்க்க மக்கள் சுய ஊரடங்கு உத்தரவு நடக்கும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து நாளிதழ்கள், ஊடகங்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.ஆனால், விருத்தாசலம் பகுதி மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாமல், பொது இடங்களில் பலர் ஒன்றுகூடும் நிலை குறையாமல் உள்ளது.

இது அதிகாரிகள் மட்டுமல்லாது பலரையும் சங்கடத்திற்கு ஆளாக்கியுள்ளது.பத்து பேருக்கு மேல் கூட வேண்டாம் என்பதற்காக பஸ், ரயில் சேவைகள் நிறுத்தம், பெருவணிக நிறுவனங்கள் மூடப்பட்ட நிலையிலும் பொது மக்கள் கூடுவதை தவிர்க்க முடியாமல் வருவாய்த்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளனர்.மாவட்டம் முழுவதும் இதே நிலை நீடிக்கிறது.இன்று முழு சுய ஊரடங்கு உத்தரவிடப்பட்ட நிலையில், பொது மக்கள் கூடுவது தவிர்க்கப்படாதது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X