பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பாதிப்பு எதிரொலி பழங்கள் வாங்க மக்கள் ஆர்வம்

Added : மார் 21, 2020
Share
Advertisement

மந்தாரக்குப்பம்: கொரோனா அச்சம் எதிரொலியால் பொதுமக்கள் பழங்களை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பள்ளி, கல்லுாரிகள் மார்ச் 31ம் தேதி வரை மூடப்பட்ட நிலையில், கூட்ட நெரிசலை தவிர்க்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.மேலும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம், கிருமிநாசினி ஆகியவை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உடலுக்கு எதிர்ப்பு சக்தி அதிகரிக்க பழச்சாறு மற்றும் பழங்கள் அதிகமாக சாப்பிட வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது.அதன்படி நெய்வேலி மந்தாரக்குப்பம் பகுதியில் பழக்கடைகளில் ஆரஞ்சு, சாத்துக்குடி, மாதுளை, ஆப்பிள், திராட்சை, வாழைப்பழம் உள்ளிட்ட பழங்கள் விலை உயர்ந்துள்ளதால் விலையை பார்க்கமால் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X