பொது செய்தி

தமிழ்நாடு

மகளிர் குழுக்கள் மூலம் முக கவசம் தயாரிப்பு தீவிரம்

Added : மார் 21, 2020
Share
Advertisement

கடலுார்: கடலுார் மக்களுக்கு முக கவசம் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க, மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் முக கவசம் தயாரிக்கும் பணியில் தீவிரமாக களமிறங்கி உள்ளனர்.கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க கடலுார் மாவட்டம் சார்பில், பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மக்களுக்கு குறைந்த விலையில் தரமான முக கவசம் மற்றும் கிருமிநாசினி கிடைக்க மகளிர் சுயஉதவி குழுக்களை மாவட்ட நிர்வாகம் களமிறக்கி உள்ளது.அவர்கள் தயாரித்த முககவசம் மற்றும் கிருமிநாசினியின் பயன்பாட்டை, கலெக்டர் அன்புச்செல்வன் துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து, மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் பல்வேறு இடங்களில் இப்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.உச்சிமேடு சமுதாய நலக்கூடத்தில் 15க்கும் மேற்பட்ட பெண்கள் முக கவசம் தயாரிப்பு பணியில தீவிரமாக ஈடுபட்டனர்.ஒருமுறை பயன்படுத்தக்கூடிய முக கவசங்கள் ரூ.10க்கு விற்பனை செய்யப்படுகிறது. லாபம் குறைவு என்றாலும் மக்களின் நலன் கருதி சேவை நோக்கத்துடன் இப்பணியில் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X