பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாத்து கொள்ள கலெக்டர் அறிவுரை

Added : மார் 21, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி: கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ளுமாறு கலெக்டர் கிரண் குராலா அறிவுரை வழங்கியுள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாத்திட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து அரசு துறைகள் மூலம் விழிப்புணர்வு பிரசாரங்கள், நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.அதேபோல், பொதுமக்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பின்பற்ற வேண்டும். சளி, இருமல், மூச்சுத் திணறலுடன் கூடிய காய்ச்சல் இருந்தால் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு உடனடியாக செல்ல வேண்டும். பொது இடங்கள் மற்றும் விழாக்களுக்கு செல்வதையும், கூட்டம் அதிகமாக கூடும் இடங்களுக்குச் செல்வதையும் தவிர்க்க வேண்டும்.பாதிப்புக்குள்ளான நாடுகளிலிருந்து வருபவர்களிடம் நேரடி தொடர்பை தவிர்க்க வேண்டும். சோப் மூலம் அடிக்கடி கை கழுவ வேண்டும். தும்மல், இருமல் வரும் போது மூக்கையும், வாயையும் கர்சிப் அல்லது துணியைக் கொண்டு மூடிக் கொள்ள வேண்டும். விடுமுறை நாட்கள் முடியும் வரை, தங்கள் குழந்தைகள் குழுவாக விளையாடாதவாறு பெற்றோர் பார்த்துக் கொள்ள வேண்டும். 10 வயதுக்கு குறைவான மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் வெளியே செல்ல வேண்டாம். மற்றவர்கள் மிக மிக அத்தியாவசமான வேலைகள் அல்லது பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் வெளியே செல்ல வேண்டும்.டீ கடைகள், மளிகைக் கடைகள், டாஸ்மாக், பஸ் நிலையம் ஆகிய இடங்களில் கூட்டம் கூடுவதையும், நின்று பேசுவதையும் தவிர்க்க வேண்டும். முடிந்தவரை வீட்டிலேயே இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் நெருக்கமாக இல்லாமல் இருப்பதே கொரோனா நோய் பரவுவதை தடுப்பதற்கு வழியாகும்.வரும் 31ம் தேதி வரை பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெறாது. கூட்டமாக சென்று அரசு அலுவலர்களிடம் மனு கொடுப்பதை தவிர்த்து இணையதளம், மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.மேலும், கொரோனா நோய் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் தகவல்களை 104,011-23978046, 04151-225351, 04151-222192 என்ற எண்கள் மற்றும் மாவட்ட கட்டுபாட்டு அறை தொலைபேசி எண் 04151-220000 தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X