கொரோனா தடுப்பு நடவடிக்கை பழங்கால கோவில்கள் மூடல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பு நடவடிக்கை பழங்கால கோவில்கள் மூடல்

Added : மார் 21, 2020
Share

ரிஷிவந்தியம்: கொரோன வைரஸ் தொற்றை தடுக்கும் பொருட்டு ரிஷிவந்தியம் பகுதியில் உள்ள இரண்டு பழங்கால கோவில்கள் நேற்று முதல் மூடப்பட்டது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் கிரண்குராலா அறிவுறுத்தலின் பேரில் ரிஷிவந்தியத்தில் உள்ள 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவில் மற்றும் திருவரங்கத்தில் உள்ள அரங்கநாத பெருமாள் கோவிலும் நேற்று முதல் வரும் 31ம் தேதிவரை பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. பூஜைகள் வழக்கம் போல் நடைபெறும். இதற்கான அறிவிப்பு பலகை, இரு கோவில்கள் வாயில்களில் அறநிலையத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ளது.பழமை வாய்ந்த இக்கோவில்கள் தினமும் காலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்தே இருக்கும். கிரகணத்தின் போது மட்டுமே மூடப்படும். தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டுள்ளது.இரண்டு கோவில்களிலும் நேற்று முதல் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது எனவும், பூஜைகள் வழக்கம்போல் நடக்கும் எனவும் அறிவிப்பு பலகையில் தெரிவிக்கப்பட்டுள்ள. 31ம் தேதி வரை தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக என அறநிலையத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X