பொது செய்தி

தமிழ்நாடு

தியாகதுருகம் வாரச்சந்தை மூடல்

Added : மார் 21, 2020
Share
Advertisement

தியாகதுருகம்: பழமையான தியாகதுருகம் வாரச்சந்தை கொரோனா தொற்று எதிரொலியால் நேற்று மூடப்பட்டது.தியாகதுருகம் பஸ் நிலையம் அருகில் சனிக்கிழமைதோறும் வாரச்சந்தை நடந்து வருகிறது. நுாறு ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் இந்த வாரச்சந்தை, பல்வேறு இயற்கை சீற்றங்களின் போதும் தடைபடவில்லை.இந்நிலையில் உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் பொருட்டு காரணமாக வார சந்தைகளை மூட அரசு உத்தரவிட்டது. அதன்படி, தியாகதுருகம் வாரச்சந்தை நேற்று மூடப்பட்டது. தகவல் தெரியாமல் வியாபாரத்திற்காக பொருட்களை ஏற்றி வந்த வியாபாரிகள் போலீசார் திருப்பி அனுப்பினர்.இதனால் சனிக்கிழமையில் மக்கள் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் சந்தை வளாகம் ஆள் அரவமின்றி வெறிச்சோடி கிடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X