சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெற்றோர் கண்டிப்பு மகள் தற்கொலை

Added : மார் 21, 2020
Share
Advertisement

ரிஷிவந்தியம்: சாப்பாடு சரியாக செய்யாததால் பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த மகள் தற்கொலை செய்து கொண்டார்.ரிஷிவந்தியம் அடுத்த ஓடியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் அஞ்சலைதேவி மகள் செவ்வந்தி,19; இவர் பகண்டைகூட்ரோட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிகிறார். கடந்த 16ம் தேதி காலை செவ்வந்தி செய்த சாப்பாடு சரியில்லாததால் தாய் அஞ்சலைதேவியும், தந்தை செந்தில்குமாரும் திட்டினர்.இதனால் மனமுடைந்த செவ்வந்தி வேலைக்கு செல்லாமல் வீட்டிலிருந்த எலி பேஸ்டை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை, சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்த பின் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி செவ்வந்தி இறந்தார்.புகாரின் பேரில் பகண்டைகூட்ரோடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X