பொது செய்தி

தமிழ்நாடு

பிரதமரின் பயிர் காப்பீட்டு தொகை மாவட்ட விவசாயிகளுக்கு விடுவிப்பு

Added : மார் 21, 2020
Share
Advertisement

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்டத்தில் பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம் 2016-17ம் ஆண்டு ராபி பருவம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் காப்பீடு செய்த விவசாயிகளின் மகசூல் இழப்பு கணிக்கப்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு காப்பீட்டு நிறுவனம் மூலம் நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு தொகை அனுப்பப்படுகிறது.இந்த திட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 7 ஆயிரம் விவசாயிகளுக்கு 203.6 கோடி ரூபாய் இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் 2016--17ம் ஆண்டு காப்பீடு செய்த விவசாயிகளில் இழப்பீட்டு தொகை பெறுவதற்கு தகுதி இருந்தும் வங்கி கணக்கு எண்கள் சரியில்லாததால் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு அனுப்ப இயலவில்லை.இழப்பீட்டு தொகை காப்பீட்டு நிறுவனத்தால் வழங்கப்பட்டு இத்திட்டத்திற்கென துவக்கப்பட்ட கலெக்டரின் வங்கி கணக்கில் தொகை பெறப்பட்டு, காப்பீட்டு தொகை 1.12 கோடி ரூபாய் இருப்பு வைக்கப்பட்டது. காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து தகுதியான விவசாயிகளின் பட்டியல் பெறப்பட்டு வேளாண் துறை அலுவலர்களால் விவசாயிகளிடமிருந்து சரியான வங்கி கணக்கினை பெற்று தற்போது காப்பீட்டு தொகை தகுதியுள்ள விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.இதுவரை சரிபார்க்கப்பட்ட 1,119 விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு 1.01 கோடி ரூபாய் கலெக்டரால் விடுவிக்கப்பட்டுள்ளது. 2016-17ம் ஆண்டு காப்பீடு செய்த விவசாயிகள் தவறான வங்கி கணக்கு எண் அல்லது செயல்படாத வங்கி கணக்கு எண்களை தவறாக தெரிவித்து காப்பீடு செய்திருந்தால் தற்போது சரியான வங்கி கணக்கு விபரங்களை வேளாண் துறை அலுவலர்களிடம் வழங்கினால், காப்பீடு தொகை பெற இயலாத விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை பெற்று வழங்கப்படும்.மேலும் விபரங்களுக்கு தங்கள் வட்டார வேளாண் விரிவாக்க மையங்களை விவசாயிகள் அணுகி பயன்பெறலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X