பொது செய்தி

தமிழ்நாடு

திருக்கோவிலூர் ஒன்றியத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை

Added : மார் 21, 2020
Share
Advertisement

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் வேங்கூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் தாமாகவே முன்வந்து ஊரடங்கு உத்தரவை பின்பற்ற வேண்டும் என்ற அறிவிப்பை பி.டி.ஒ., அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டது.தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி இன்று பொதுமக்கள் தாமாகவே முன்வந்து ஊரடங்கு உத்தரவை பின்பற்ற வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். இதனை ஏற்று நேற்று திருக்கோவிலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வேங்கூர் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் தாமாகவே முன்வந்து ஊரடங்கு உத்தரவை பின்பற்ற வேண்டியதன் அவசியம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பி.டி.ஓ., ரேச்சல்கலைச்செல்வி தலைமையில் ஊராட்சிகள் தோறும் சென்று அறிவிப்புகளை வெளியிட்டு, தடுப்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டனர்.நிகழ்ச்சியின் போது பொறியாளர் நித்தியா, சர்வேஸ்வரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தரமூர்த்தி மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X