பொது செய்தி

தமிழ்நாடு

காணொளி வாகனத்தில் விழிப்புணர்வு பிரசாரம்

Added : மார் 22, 2020
Share
Advertisement

திண்டிவனம்: திண்டிவனத்தில் வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில், தாலுகா அலுவலகத்தில் காணொளி மூலம் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு வாகன துவக்க விழா நடந்தது.தாசில்தார் ராஜசேகர் தலைமை தாங்கினார். சப் கலெக்டர் அனு, விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு வாகனம், திண்டிவனம் மற்றும் மரக்காணம் தாலுக்காவை சேர்ந்த கிராமங்களுக்கு சென்று கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.நிகழ்ச்சியில், மரக்காணம் தாசில்தார் ஞானம், மண்டல துணை தாசில்தார் வேலு, வருவாய் ஆய்வாளர் சித்தார்த்தன், கிராம உதவியாளர் சங்க மாவட்ட தலைவர் லட்சுமணன், மாவட்ட செயலர் பலராமன், வட்டத்தலைவர்கள் ஏழுமலை, வட்ட செயலர் வேதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X