பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பு நடவடிக்கை

Added : மார் 22, 2020
Share
Advertisement

விழுப்புரம்: கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை யொட்டி, மாவட்ட எல்லைகளில் தீவிர மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், இன்று மக்கள் ஊரடங்கிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதனையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில், தமிழகம் - புதுச்சேரி மாநில எல்லைகளாக உள்ள கெங்கராம்பாளையம், பட்டானுார், அனுமந்தை ஆகிய எல்லை பகுதிகள் இன்று மூடப்படுகிறது. இதற்காக இந்த மூன்று சோதனைச் சாவடிகளிலும் தலா ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் 10 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இது தவிர ஒவ்வொரு சோதனை சாவடிகளிலும், இரு டாக்டர்கள், நான்கு உதவியாளர்கள் ஆகியோரும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு, இவர்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வாகனங்களில் வருவோரை, நிறுத்தி அனைவரையும் 'தெர்மல் ஸ்கேனர்' மூலம் மருத்துவ பரிசோதனை செய்த பின்னரே, மாவட்டத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.இந்த பரிசோதனையின் போது, கொரோனா வைரஸ் அறிகுறிகளாக காய்ச்சல், சளி, இருமல் ஆகியவை ஏதாவது தென்பட்டால் அவர்களை, தனிமைபடுத்தி அருகேவுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்து உரிய முறையில் சிகிச்சை பெறுவதற்கான ஏற்பாடு செய்து வருகின்றனர்.இதேபோல் கிளியனுார், கோட்டக்குப்பம், அனிச்சங்குப்பம், தொந்திரெட்டிபாளையம், சிறுவந்தாடு, பெரும்பாக்கம் ஆகிய மதுவிலக்கு சோதனை சாவடிகளிலும் போலீசார் கூடுதலாக பணியில் ஈடுபடுத்தப்பட்டு, அவ்வழியே வரும் பொதுமக்களை மருத்துவ குழு மூலம் பரிசோதனை செய்து வருகின்றனர்.இந்த பணிகளை, எஸ்.பி., ஜெயக்குமார் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். ஏ.டி.எஸ்.பி., சரவணக்குமார், டி.எஸ்.பி.,க்கள் சங்கர், அஜய்தங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X