சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திண்டிவனம் அருகே தீ விபத்து: 5 வீடுகள் எரிந்து சேதம்

Added : மார் 22, 2020
Share
Advertisement

திண்டிவனம்: திண்டிவனம் அருகே நேற்று மதியம் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஐந்து வீடுகள் எரிந்ததில், ரூ. 7 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது.திண்டிவனம் அடுத்த பெரமண்டூர் பெரிய தெருவை சேர்ந்தவர் இருதயராஜ், 32; இவரது கூரை வீடு நேற்று மதியம் 12:30 மணிக்கு திடீரென தீப்பிடித்து எரிந்தது. சற்று நேரத்தில் வீட்டிற்குள் இருந்த காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. அதில், அருகில் இருந்த குமார்,70; மூர்த்தி,65; மார்கண்டேயன்,65; ஜெமினி,60; ஆகியோரின் வீடுகளுக்கும் தீ பரவியது. காற்று வேகமாக வீசியதால், அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முடியாமல் போராடினர்.தகவலறிந்த திண்டிவனம் தீயணைப்பு வீரர்கள் நிலைய அதிகாரி லட்சுமணன் தலைமையில், இரண்டு வண்டியுடன் விரைந்து சென்று இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.இருப்பினும், ஐந்து வீடுகளில் இருந்த பீரோ, 'டிவி', மின் விசிறி, பாத்திரங்கள், தானியங்கள் உள்ளிட்ட ரூ.7 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. தீ விபத்து பற்றி தகவலறிந்த சப் கலெக்டர் அனு, தாசில்தார் ராஜசேகர் உள்ளிட்டோர் பார்வையிட்டு, ஆறுதல் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X