பொது செய்தி

தமிழ்நாடு

மக்கள் ஊரடங்கு உத்தரவு

Added : மார் 22, 2020
Share
Advertisement

விழுப்புரம்; ஊரடங்கு உத்தரவையொட்டி, அத்தியாவசிய பொருட்கள் வாங்க கிராம மக்கள் குவிந்ததால் விழுப்புரம் மார்க்கெட் வீதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது.உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று நாடு முழுவதும் 'மக்கள் ஊரடங்கு' அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 7:00 மணி முதல் இரவு 9:00 மணிவரை யாரும் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.இதன் காரணமாக பொதுமக்கள், அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்க நேற்று கடைவீதிகளில் குவிந்தனர். இதேபோன்று, விழுப்புரத்தை சுற்றியுள்ள கிராம மக்கள் நேற்று விழுப்புரம் கடை வீதிகளுக்கு படையெடுத்தனர். இதனால், விழுப்புரம் எம்.ஜி., ரோடு, பாகர்ஷா வீதி உள்ளிட்ட மார்க்கெட் பகுதிகளில் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலைமோதியது. மளிகை மற்றும் காய்கறி கடைகளவில் விற்பனை அமோகமாக நடைபெற்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X