கொரோனாவிற்கு 2 மருந்துகள் ; டிரம்ப் அறிவிப்பு

Updated : மார் 22, 2020 | Added : மார் 22, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement

வாஷிங்டன் : கொரோனா வைரசின் தாக்கத்தை குறைத்து நோய் பரவுதலை கட்டுக்குள் வைக்க அசித்ரோமைசின் மற்றும் ஹைட்ரோகுளோரோகுயின் ஆகிய மருந்துகளை உட்கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நோயின் பரவுதலை கட்டுக்குள் வைக்க மத்திய மற்றும் மாநில அரசுகளும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து பிரான்சில் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். அதில் குளோரோகுயின் என்ற மருந்து (மலேரியாவுக்கு பயன்படுத்தப்படும் மருந்து) கொரோனாவின் தொற்று நோய் தன்மையை குறைத்து நோய் பரவுதலை கட்டுப்படுத்துவதாக தெரிவித்தனர்.


latest tamil news



இதனை அமெரிக்காவும் தங்கள் ஆய்வு மூலம் ஒத்துக்கொண்டது. மேலும் அதிபர் டிரம்ப், கொரோனாவிற்கு ஏப்ரல் மாத இறுதிக்குள் மருந்து கண்டுபிடிக்கப்படும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் டிரம்ப், கொரோனா நோய் குறித்து இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் கூறியதாவது : கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.


latest tamil news



ஹைட்ராக்சிகுளோரோகுயின் மற்றும் அசித்ரோமைசின் ஆகிய 2 மருந்துகளையும் ஒன்றாக உட்கொண்டால் கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தலாம். இந்த கண்டுபிடிப்புக்காக பாடுபட்ட அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துப்பொருள் கட்டுப்பாட்டுத்துறைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். நோயிலிருந்து விடுபட மருந்துகளை உடனடியாக பயன்படுத்துங்கள். கடவுள் எல்லோரையும் ஆசீர்வதிக்கட்டும். இவ்வாறு கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
23-மார்-202007:05:22 IST Report Abuse
skv srinivasankrishnaveni கண்ணாபின்னான்னு தின்னுட்டு கொரோனா கொரோனான்னு அலறினா என்னய்யா அருத்தம் பாம்பு தெலு என்று விஷ ஜந்துக்களை துன்னுபோட்டு தின்னாதவாளையும் படுத்துது நோய் ஆல்ரெடி ஏராளமான மாத்திரிக்கைகள் சிறப்புக்கள் லொட்டு லொசுக்கு ஊசிமூலம் குத்துறீங்க இன்னம் மாத்திரைகளா எல்லாம் முழுங்கிவச்சா தர்மலோக யாத்திரையேதான் ராவணா
Rate this:
Cancel
thulakol - coimbatore,இந்தியா
22-மார்-202018:03:17 IST Report Abuse
thulakol இயற்கையின் விளையாட்டை இயற்கை சரி செய்யும் நாம் சரியாக இருந்தால்
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
22-மார்-202017:31:44 IST Report Abuse
D.Ambujavalli நாம் நிலவேம்புக் கஷாயம், வைட்டமின்,சி , இஞ்சி, சீரகம் என்று பல பரிசோதனை மருந்துகளை உள்கொண்டு பார்க்கிறோம். அதுபோலத்தான் அமெரிக்காவும் இந்த இரு மாத்திரைகளை முயற்சித்து, சிலருக்குப் பலனளித்திருக்கலாம் தான் கண்டதை உலக நன்மைக்காகப் பகிருவது நல்லது தானே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X