பொது செய்தி

தமிழ்நாடு

மயிலம் வட்டார பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை

Added : மார் 22, 2020
Share
Advertisement

மயிலம்: மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்குட்பட்ட கிராமப் பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெகதீசன், சிவக்குமார் தலைமையிலான குழுவினர் கிராமம் முழுவதும் நேரடியாக சென்று கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் மேற்கொள்வதை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் பொதுமக்களிடம் வைரஸ் பரவும் விதம் குறித்தும், அதனைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும், மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ள தடுப்பு நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு அதற்குட்பட்டு செயல்பட அறிவுரை கூறி விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.இதேபோன்று, கிராமங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க ஊரக வளர்ச்சி துறை மற்றும் சுகாதார துறைகள் சார்பில் 30 வினாடி கை கழுவும் முறைகள் குறித்து செயல் விளக்கம் அளித்தும் வருகின்றனர்.மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டு பகுதியில் ஊராட்சி செயலர் நடராஜ் தலைமையிலான துாய்மை பணியாளர்கள், பஸ் நிலையம், திருமண மண்டபங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணியை மேற்கொண்டனர்.இதனை ஊரக வளர்ச்சி உதவி திட்ட இயக்குனர் சீனிவாசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெகதீசன், சிவகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X