பொது செய்தி

தமிழ்நாடு

பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு புதிதாக வழி ஏற்படுத்தும் பணி தீவீரம்

Added : மார் 22, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பொதுப்பணித்துறை அலுவகத்திற்கு புதிதாக வழி ஏற்படுத்தும் பணி நடந்து வருகிறது.கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரிக்கப்பட்ட நிலையில், கலெக்டர், டி.ஆர்.ஓ., எஸ்.பி. உள்ளிட்ட அலுவலகங்கள் தற்காலிக அடிப்படையில் ஆங்காங்கே ஏற்கனவே அமைந்துள்ள அரசுத்துறை அலுவலகங்களில் இயங்கி வருகின்றன.அதன்படி கள்ளக்குறிச்சி கலெக்டர் குடியிருப்பு மற்றும் முகாம் அலுவலகம் கச்சிராயபாளையம் சாலையில் உள்ள பொதுப்பணித்துறையின் வெள்ளாறு வடிநில கோட்ட அலுவலகத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு இருந்த பெரும்பான்மை கட்டடங்கள் கலெக்டர் அலுவலகத்திற்கென ஒதுக்கப்பட்டது. ஆனால் மற்ற பிற பகுதிகளில் பொதுப்பணித்துறையின் அனைத்து அலுவலகங்களும் இயங்கி வருகின்றன.தற்காலிகமாக இயங்கும் கலெக்டர் அலுவலகத்தின் குடியிருப்பு மற்றும் கேம்ப் ஆபீஸ் அலுவலகங்கள், இனி மாவட்ட தலைநகரின் நிரந்தர அலுவலகம் அமையும்வரை தற்காலிக பயன்பாட்டில் இருக்கும் பொதுப்பணித்துறை அலுவலகத்தின் பிரதான வழி, கலெக்டர் அலுவலகத்தின் பயன்பாட்டிற்காக மாறியதால், பொதுப்பணித்துறைக்கென புதிய வழியை அமைக்கும் பணி துவங்கப்பட்டது.கலெக்டரின் முகாம் அலுவலகத்திற்கான வழியை பயன்படுத்துவதற்கு பதிலாக அங்குள்ள மதில் சுவரை உடைத்து பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கான வழி அமைக்கும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X