பொது செய்தி

தமிழ்நாடு

கல்லை தமிழ் சங்கத்தில் முப்பெரும் விழா

Added : மார் 22, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கல்லை தமிழ் சங்கம் சார்பில் சாதனையாளர் விருது பெற்ற கவிஞருக்கு பாராட்டு, மகளிர் தின கொண்டாட்டம், சங்க இலக்கிய தொடர் சொற்பொழிவு உள்ளிட்ட முப்பெரும் விழா நடந்தது.நிகழ்ச்சிக்கு சங்க சிறப்பு தலைவர் கோமுகி மணியன் தலைமை தாங்கினார். பகுத்தறிவு இலக்கிய மன்ற தலைவர் ஜெயராமன், அரியபெருமானுார் ஊராட்சி முன்னாள் தலைவர் நல்லாப்பிள்ளை, சங்கை தமிழ் சங்க தலைவர் சுப்பராயன், படைப்பாளர் சங்க தலைவர் செம்பியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முருகன் வரவேற்றார்.தலைமை ஆசிரியர் ஆலத்துார் சண்முகம் திருக்குறள் விளக்கவுரை வழங்கிட, விழுப்புரம் தமிழ் சங்கம் சார்பில் வாழ்நாள் தமிழ்ப்பணி பட்டயம் வழங்கி சிறப்பிக்கப்பட்ட கல்லை கவிஞர் கோவிந்தராஜனுக்கு, கவிஞர் மலரடியான் பாராட்டுரை வழங்கினார். மலையாள மொழியில் எழுதப்பட்ட பசுவேசுவரனின் புரட்சி எனும் நுாலை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட மஞ்சக்கல் உபேந்திரனுக்கு சங்கை திருக்குறள் பேரவை செயலர் லட்சுமிபதி ஆய்வறிக்க வழங்கினார்.தொடர்ந்து ஆசுகவி ஆராவமுதன், புதுச்சேரி சிவசு அறக்கட்டளை தலைவர் சண்முகசுந்தரம், அம்பேத்கர், சாதிக்பாட்சா, சித்திரைச்செல்வி, சண்முக பிச்சப்பிள்ளை, காயத்ரி, சிவசூரியன், கஸ்துாரி இளையாழ்வார், தேவதிருவருள் வாசுதேவன், ஆனந்தி ஆகியோர் இலக்கிய தொடர் சொற்பொழிவாற்றினர்.கல்லை தமிழ் சங்க செயலர் மதிவாணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அரசம்பட்டு திருவள்ளுவர் தமிழ் சங்க தலைவர் சவுந்திரராஜன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X