சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பியூன் வேலைக்கு போலி ஆணை வழங்கிய ஆந்திர வாலிபர் கைது

Added : மார் 22, 2020
Share
Advertisement
 பியூன் வேலைக்கு போலி ஆணை வழங்கிய ஆந்திர வாலிபர் கைது

சேலம்:சேலம் ரயில்வே கோட்டத்தில், 'பியூன்' வேலையில் சேர, போலி பணி நியமன ஆணையுடன் வந்த ஆந்திரா வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம், அனந்தப்பூர் மாவட்டம், குண்டுக்கல் அடுத்த, முதினாபாத் பகுதியை சேர்ந்தவர், குசனப்பா, 55; குண்டுக்கல் ரயில்வே பிரிவில் டீசல் மெக்கானிக்காக உள்ளார்.இவரது மகன் அனுமேத், 31; பி.காம்., பட்ட தாரியான இவருக்கு திருமணமாகி, மனைவி ராஜேஸ்வரி, 25, இரு ஆண் குழந்தைகள் உள்ளன. அனுமேத், நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு, சேலம் ரயில்வே கோட்ட, 'பர்சனல்' அதிகாரி திருமுருகனை சந்தித்து, தன், பணி நியமன ஆணையை வழங்கியுள்ளார்.அதில், கோட்டஅலுவலகத்தில், 'பியூன்' வேலைக்கு, அனுமேத் நியமனம் செய்யப்பட்டு, கிழக்கு மத்திய ரயில்வேதுறை, ஆணை பிறப்பித்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், வாலிபரின் நடத்தை மற்றும் நியமன கடிதம் மீது சந்தேகம் எழுந்ததால், அதிகாரிகள் விசாரித்ததில், போலி நியமன ஆணை என, தெரியவந்தது.இது குறித்து, கோட்ட முதுநிலை அலுவலக கண்காணிப்பாளர் ஈஸ்வரன் புகாரில், சூரமங்கலம் போலீசார், போலி ஆவணம் தயாரித்தல், அதை உண்மை ஆவணமாக பயன்படுத்தல், மோசடி உட்பட நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிந்து, அனுமேத்தை, நேற்று கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X