பொது செய்தி

தமிழ்நாடு

நோய் தொற்றும் அபாயத்தில் துாய்மை பணியாளர்கள்

Added : மார் 22, 2020
Share
Advertisement

செஞ்சி: கிராம ஊராட்சிகளில் கையுறை மற்றும் மாஸ்க் வாங்க நிதி இல்லாமல், துாய்மை பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களின்றி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக நாடு முழுவதும் மக்கள் கூடும் இடங்களில் கிருமிநாசினி நீரை ஸ்பிரே மூலம் தெளித்து வருகின்றனர். அசுத்தமான இடங்களில் பிளீச்சிங் பவுடர் துாவி வருகின்றனர். கிராம ஊராட்சிகளில் இப்பணிகளில் துாய்மைப் பணியா ளர்கள், துாய்மை காவலர்கள் மற்றும் டேங்க் ஆபரேட்டர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.ஒவ்வொரு ஊராட்சியிலும் 5 முதல் 10 பேர்வரை இந்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கிராம ஊராட்சிகளுக்கு ஒன்றிய அலுவலகங்கள் மூலமாக பிளீச்சிங் பவுடர் களை சப்ளை செய்து வருகின்றனர். ஆனால், பிளீச்சிங் பவுடர்களை தெளிப்பதற்கும், கிருமிநாசினி தண்ணீரை ஸ்பிரே செய்வதற்கும் செல்லும் பணியாளர்களுக்கு தேவையான மாஸ்க்கும், கையுறை வழங்குவதில்லை.இவற்றை கிராம ஊராட்சிகள் சொந்த நிதியிலிருந்து வாங்கிக் கொள்ளும்படி அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். சில ஆண்டுகளாக ஊராட்சிக்கு நிதி வருவது நிறுத்தப்பட்டுள்ளது. பெரும்பான்மையான கிராமங்களில் வங்கி கணக்கில் ஜீரோ பேலன்ஸ் உள்ளது. எனவே கிராம ஊராட்சிகள் மூலம் இவற்றை வாங்குவதற்கு தற்போது நிதி வசதி இல்லை.அத்துடன் கையுறை மற்றும் மாஸ்க் பற்றாக்குறை இருப்பதால் எங்கு வாங்குவது, என்ன விலைக்கு வாங்குவது, என்ன தரம் இருக்க வேண்டும் என எதுவும் தெரியாமல் ஊராட்சி செயலர்கள் குழப்பத்தில் உள்ளனர்.இந்நிலையில் ஊராட்சிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள துாய்மைப் பணியாளர்கள், துாய்மை காவலர்கள் தினமும் எந்தவித பாதுகாப்பு அம்சமும் இன்றி கிராமம் முழுவதும் சுற்றி வந்து, நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் இவர்களுக்கு நோய் தொற்றும் அபாயம் உள்ளது. எனவே இவர்களின் நலன் காக்க அனைத்து ஊராட்சிகளுக்கும் மாஸ்க் மற்றும் கையுறைகள் வழங்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X