சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலையில் கிடந்த மதுவை குடித்தவர் பலி

Added : மார் 22, 2020
Share
Advertisement

திண்டிவனம்: சாலையோரம் வீசிய மதுவை குடித்த முதியவர் இறந்தார். மற்றொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.கிளியனூர் அடுத்த கீழ்கூத்தப்பாக்கத்தை சேர்ந்தவர் கோவிந்தன் மனைவி அமுதா, 55; இவர் புதுச்சேரியில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்தபோது, சாலையோரம் வீசப்பட்ட கொரியன் நெப்போலியன் குவார்ட்டர் மதுபாட்டிலை எடுத்து வந்து, தனது உறவினரான கீழ்கூத்தப்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாரி, 60; என்பவரிடம் கொடுத்தார்.அதனை மாரி மற்றும் அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை, 55; ஆகியோர் குடித்தனர். சற்று நேரத்தில் இருவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடன் அவர்களை மீட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாரி இறந்தார். ஏழுமலை சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து கிளியனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X