பொது செய்தி

தமிழ்நாடு

4.50 லட்சம் லாரிகள் இன்று இயங்காது: உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு

Added : மார் 22, 2020
Share
Advertisement
 4.50 லட்சம் லாரிகள் இன்று இயங்காது: உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு

நாமக்கல்:''தமிழகம் முழுவதும் இன்று, 4.50 லட்சம் லாரிகள் இயக்கப்படாது,'' என, தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர், குமாரசாமி கூறினார்.
நாமக்கல்லில், அவர் கூறியதாவது:'கொரோனா வைரஸ்' தாக்குதலில் இருந்து மக்களை காக்க, அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கைகளை வரவேற்கிறோம். மக்கள் ஊரடங்கை முன்னிட்டு, தமிழகத்தில், இன்று காலை, 7:00 முதல், இரவு, 9:00 மணி வரை, 4.50 லட்சம் சரக்கு போக்குவரத்து லாரிகள் நிறுத்தப்படும். இதனால், 5,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும். ஏற்கனவே, பல்வேறு இழப்புகளை சந்தித்து கொண்டிருக்கிற லாரி தொழில், சரிவில் இருந்து மீள, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லாரி தொழில் வளர்ச்சிக்கு, நாங்கள் பெற்றுள்ள கடன் தொகைக்கு, தனியார் நிதி நிறுவனங்களிடம் பேசி, தவணை காலத்தை தள்ளி வைக்க வேண்டும். உரிய வட்டிகளை செலுத்தி விடுகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
எல்லைகளில் கண்காணிப்பு
இதற்கிடையில், 'கொரோனா' அச்சத்தால், மாநிலம் முழுவதும் உள்ள, எல்லையோர சோதனை சாவடிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.நீலகிரி மாவட்ட எல்லைகளான, கக்கனல்லா, நாடுகாணி, சோலாடி, பாட்ட வயல், தாளூர், நம்பியார்குன்னு, கோட்டூர், மணல்வயல், கக்குண்டி உட்பட சோதனை சாவடிகளில், நேற்று முதல், கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சுகாதார துறையினர், கால்நடை பராமரிப்பு துறையினர், வனத்துறையினர், வருவாய் துறையினரும் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.நேற்று காலை, கேரளாவிலிருந்து தமிழக எல்லை வந்த வாகனங்கள் அனைத்தும், திருப்பி அனுப்பப்பட்டன. நீலகிரியில் இருந்து கேரளா செல்லும் வாகனங்களின் அனைத்து விபரங்களையும், பதிவு செய்த பின் அனுமதி வழங்கப்பட்டது.அதேபோல, கர்நாடகா- தமிழக எல்லையில், நேற்று தெர்மல் ஸ்கேனர் வாயிலாக, வாகன ஓட்டிகள் மற்றும் பயணியர் பரிசோதனை செய்யப்பட்டு, தமிழகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். மாலையில் படிப்படியாக வாகன போக்குவரத்து குறைக்கப்பட்டு, கர்நாடகாவுக்கு வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X