சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சவுக்கை வியாபாரி பலி

Added : மார் 22, 2020
Share
Advertisement

விழுப்புரம்: பஸ்சில் பயணித்த தஞ்சாவூர் மாவட்ட சவுக்கை வியாபாரி மாரடைப்பால் இறந்தார்.தஞ்சாவூர் மாவட்டம், தேவன்குடி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன்,70; சவுக்கை வியாபாரி. இவர், கருப்பட்டிபட்டை சேர்ந்த ரவிசந்திரன்,54; என்பவரோடு, நேற்று முன்தினம் விழுப்புரத்தில் இருந்து மதகடிபட்டு நோக்கி தனியார் பஸ்சில் சென்றார். விழுப்புரம், கிழக்கு பாண்டி ரோடு, பானாம்பட்டு பாதையருகே பஸ் சென்ற போது, முருகேசனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடன் அங்கிருந்த பயணிகள் அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தனர்.இதுகுறித்து விழுப்புரம் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X