ஊரடங்கு உத்தரவை பின்பற்ற மக்கள் தாமாகவே முன் வரவேண்டும்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கு உத்தரவை பின்பற்ற மக்கள் தாமாகவே முன் வரவேண்டும்

Added : மார் 22, 2020
Share
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் தாமாகவே முன்வந்து ஊரடங்கு உத்தரவை பின்பற்றுமாறு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இன்று (22ம் தேதி) ஊரடங்கு மேற்கொள்ள பிரதமர் கூறியுள்ளார்.இது குறித்து கள்ளக்குறிச்சி கலெக்டர் கிரண்குராலா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:இன்று கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் தாமாகவே முன்வந்து ஊரடங்கு உத்தரவை பின்பற்றுமாறு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இன்று (22ம் தேதி) ஊரடங்கு மேற்கொள்ள பிரதமர் கூறியுள்ளார்.இது குறித்து கள்ளக்குறிச்சி கலெக்டர் கிரண்குராலா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:இன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளை சேர்ந்த மக்கள் அனைவரும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டுமே வெளியில் வரவேண்டும், பதற்றம் வேண்டாம், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் இந்நோய் பரவ வாய்ப்புள்ளதால் அவர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பிற துறை சார்ந்த பணியாளர்களுக்கு இன்று மாலை 5:00 மணிக்கு மணியோசை மூலமும், கை தட்டியும் மக்கள் நன்றி தெரிவிக்க வேண்டும். வதந்திகளை நம்ப வேண்டாம்.இன்று காலை 7:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை அரசு பஸ்கள் இயங்காது. தனியார் பஸ்கள், சிற்றுந்து உரிமையாளர்கள் அரசின் முயற்சிக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்து, தாமாகவே முன்வந்து ஊரடங்கு உத்தரவினை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X