விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 142 மினி டாடா ஏசி வாகனங்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.விழுப்புரம் மாவட்டத்தில் கலெக்டர் அண்ணாதுரை உத்தரவின் பேரில் 142 மினி டாடா ஏசி வாகனங்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், கைகளை சுத்தமாக வைத்து கொள்ளுதல், தன் சுகாதாரம், சுற்றுப்புறம் துாய்மை உள்ளிட்டவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டு மக்கள் மற்றும் வெளிமாநில மக்களுக்கு பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கொரோனா பரிசோதனை மையங்கள் மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது. அவசர கால அவசியம் கருதி, விழுப்புரம் சுகாதார மனிதவள மேம்பாட்டு நிறுவன வளாகத்தில்,71 படுக்கை வசதிகளோடு தற்காலிக தனி மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனி மருத்துவமனைகளை கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE