நிச்சயதார்த்தம் நடத்தி ரூ.12 லட்சம், நகை மோசடி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிச்சயதார்த்தம் நடத்தி ரூ.12 லட்சம், நகை மோசடி

Added : மார் 22, 2020
Share

நாகர்கோவில்:நாகர்கோவில் அருகே நிச்சயதார்த்தம் நடத்தி, பெண் வீட்டில் இருந்து, 12 லட்சம் ரூபாய் பணம், நகை மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், கருங்கல் அருகே மங்கலகுன்று திருஞானபுரத்தை சேர்ந்தவர், அபிஷா 22. இவருக்கும் திருவட்டாறு வியன்னுாரை சேர்ந்த சுந்தர்ராஜ், 30, என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.பின், நிச்சயதார்த்தமும் நடத்தப்பட்டு, 12 லட்சம் ரூபாயும், 40 பவுன் நகையும் கொடுக்க முடிவானது.ரூ.12 லட்சம் மற்றும் சிறிது நகையை சுந்தர்ராஜ் வாங்கியுள்ளார்.
இதன்பின், சுந்தர்ராஜ் மாயமாகி விட்டார். இதுபற்றி பெண் வீட்டார் கேட்ட போது, அவர்களது வீட்டில் இருந்தவர்கள் உரிய பதிலளிக்கவில்லை.இந்நிலையில், கருங்கல்பகுதியில், சுந்தர்ராஜை பார்த்து அவரை தடுத்து நிறுத்தி, அபிஷா பிரச்னை ஏற்படுத்தினார்; அவரை போலீசிடம் ஒப்படைத்தார். போலீசார் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X