இந்தியா

கைதிகளை வீடியோகான்பரன்ஸில் சந்திக்கும் வசதி புதுச்சேரி சிறையில் நாளை முதல் அமல்

Added : மார் 22, 2020
Share
Advertisement

புதுச்சேரி: புதுச்சேரியில், சிறை கைதிகளை வீடியோ கான்பரன்ஸ் மூலம் சந்திக்கும் வசதி, நாளை முதல் அமல்படுத்தப்படுகிறது.புதுச்சேரி சிறைத்துறை தலைமை கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தல்படி ,கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, காலாப்பட்டு மத்திய சிறையில் உள்ள கைதிகளை, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.குடும்ப உறுப்பினர்கள், கைதிகளை வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடர்பு கொள்ளும் வசதியை நடைமுறைப்படுத்த, சிறைத்துறை நிர்வாகம் தேசிய தகவல் தொடர்பு மையத்தை கேட்டுக் கொண்டது.இதற்கு, https://eprisons.nic.in இணையதளம் மூலம் பதிவு செய்ய வேண்டும். இந்த வசதி நாளை (23ம் தேதி) முதல் அமல்படுத்தப்படும். காலை 9.௦௦ முதல் 11.௦௦ மணி வரை, மதியம் 2.00 முதல் மாலை 4.௦௦ மணி வரை தொடர்பு கொள்ளலாம்.திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் விசாரணை கைதிகளையும், செவ்வாய், வியாழ கிழமைகளில் தண்டனை கைதிகளையும் தொடர்பு கொள்ள முடியும்.வழக்கறிஞர்கள், சம்பந்தப்பட்ட கைதிகளை e-mulakat மூலம் அனைத்து வேலை நாட்களிலும் தொடர்பு கொள்ளலாம். இதற்கு, இரண்டு நாட்கள் முன் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.மின்னஞ்சல், குறுஞ்செய்தி மூலம் காணொளி தொடர்பு ஏற்படுத்தப்படும். பொதுமக்கள் இந்த வசதியினை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த செயல்பாடு பற்றிய கருத்துக்களை csjjail.pon@nic.in என்ற இ-மெயில் முகவரியில் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X