இந்தியா

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு மக்களுக்கு முதல்வர் நாராயணசாமி வேண்டுகோள்

Added : மார் 22, 2020
Share
Advertisement

புதுச்சேரி: புதுச்சேரி அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என, முதல்வர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:'கொரோனா' வைரஸ் பரவுவதை தடுப்பது தொடர்பாக, நேற்று பிரதமர் அனைத்து மாநில, யூனியன் பிரதேச முதல்வர்களுடன் காணொளி மூலம் கலந்தாய்வு செய்தார். இக்கலந்தாய்வில் நானும் கலந்து கொண்டேன். கலந்தாய்வின்போது பேசப்பட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பொது மக்கள் பின்பற்ற வேண்டும்.1.மிகவும் அத்தியாவசிய பணிகளை தவிர, மற்ற பணிகளுக்கு வீட்டை விட்டு வெளியே செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.2.அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது.3 .இன்று காலை 7.௦௦ முதல் இரவு 9.௦௦ மணி வரை பொதுமக்கள் தாமாகவே முன்வந்து ஊரடங்கு உத்தரவை பின்பற்ற வேண்டும்.4.கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள், உள்ளாட்சி பணியாளர்கள், ராணுவம், விமான நிலையம், பிற துறை பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இன்று மாலை 5.௦௦ மணிக்கு மணியோசை மூலமும், கைதட்டியும் நன்றி தெரிவிக்க வேண்டும்.5.சாதாரண மருத்துவ சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு செல்வதை தவிர்க்கவும், அறுவை சிகிச்சை செய்ய தேதி நிர்ணயித்திருந்தால் அதை முடிந்த வரை தள்ளிவைக்க அறிவுறுத்தப்படுகிறது.6.வீட்டில் பணிபுரியும் பணியாளர்கள், டிரைவர்கள், தோட்ட பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு இன்று சம்பளத்தை நிறுத்தக் கூடாது.7.பதற்றத்துடன் பொருட்கள் வாங்குவதை மக்கள் தவிர்க்க வேண்டும்.8.வதந்திகளை நம்ப வேண்டாம்.மேலும், புதுச்சேரி அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவை1.கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், பொதுமக்கள் நலன் கருதி தனியார் பயிற்சி நிறுவனங்கள் போன்றவை 31ம் தேதி வரை இயங்குவதை தவிர்க்க வலியுறுத்தப்பட்டுள்ளது.2. அரசு பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் பார்வையிடப்பட்டு, கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க ஏதுவாக தனி மையங்கள் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன.இதற்காக பல அரசு பள்ளி கட்டடங்களில் உடனடி பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள பள்ளிக் கல்வித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.3.சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை மற்றும் இதர அத்தியாவசிய கூட்டம் தவிர வழக்கமான அலுவல்சார் கூட்டங்கள், சந்திப்புகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என அனைத்து துறைகளையும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.4.முக கவசம், கைகளை கழுவுவதற்கான கிருமி நாசினி கிடைப்பதில் நிலவும் தட்டுப்பாட்டை போக்க, சுய உதவிக் குழுக்கள் மூலம் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு பத்தாயிரம் வீதம் ஒரு லட்சம் முக கவசம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முக கவசங்கள் சுகாதார பணிகளில் ஈடுபடுவோருக்கு முதலில் வழங்கப்படும். பிறகு காவலர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், ஆஷா ஊழியர்களுக்கு வழங்கப்படும்.5 புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு நூலகங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.6.நாளை 23ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியாற்ற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.7. இன்றைய சுய ஊரடங்கிற்கு வணிகர்கள் முழு ஒத்துழைப்பு தந்து சுய ஊரடங்கு வெற்றி பெற உதவு வேண்டும்.8.இன்று அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்காது.அரசின் 'கொரோனா' வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X