4,001 பேருக்கு இருதய சிகிச்சை: அரசு மருத்துவமனை சாதனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

4,001 பேருக்கு இருதய சிகிச்சை: அரசு மருத்துவமனை சாதனை

Added : மார் 22, 2020
Share

கோவை:கோவை அரசு மருத்துவமனையில், 'கேத்லேப்' என்ற நவீன கருவி மூலம், கடந்த இரு ஆண்டுகளில், 4,001 பேருக்கு இருதய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக, டீன் அசோகன் தெரிவித்தார்.கர்ப்பிணிகளுக்கான இருதய நோய் குறித்த கருத்தரங்கு, கோவை அரசு மருத்துவமனையில் நடந்தது. அதில், மருத்துவமனை டீன் அசோகன் பேசியதாவது:பிரசவத்தின்போது ஏற்படும், தாய் - சேய் இறப்பை தடுக்க, சுகாதார துறை பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் ஆகியவற்றால் பிரசவத்தின்போது கர்ப்பிணிகளுக்கு இருதய நோய் ஏற்படுகிறது. இருதய நோயால் மூச்சு திணறல், நெஞ்சு வலி ஏற்பட்டு கர்ப்பிணிகள் இறப்பதோடு, கருவில் இருக்கும் குழந்தைக்கும் பாதிப்பை உண்டாக்குகிறது. கர்ப்ப காலத்தில் ஏற்படும் இருதயம் தொடர்பான பிரச்னைகளை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.இருதய அறுவை சிகிச்சை அளிக்க, ரூ.6.5 கோடியில், 'கேத்லேப்' என்ற நவீன கருவி, வாங்கப்பட்டது. இதன் மூலம், கடந்த இரண்டு ஆண்டுகளில், 2,886 பேருக்கு ஆஞ்சியோகிராம், 1,115 பேருக்கு ரத்தக்குழாய் அடைப்புக்கு 'ஸ்டென்ட்' பொருத்தப்பட்டது. மொத்தம், 4,001 பேருக்கு இருதய சிகிச்சை அளித்து, டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். காப்பீடு திட்டத்தில், 6 பேருக்கு 'பேஸ்மேக்கர்' (செயற்கை இருதய துடிப்பு) கருவி பொருத்தப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.மருத்துவமனை கண்காணிப்பாளர் சடகோபன், இருதயவியல் துறை தலைவர் நம்பிராஜன், அரசு மருத்துவ கல்லுாரி முதல்வர் லலிதா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X