இந்தியா

சிக்னல்களில் 'கொரோனா' விழிப்புணர்வு அசத்தும் போக்குவரத்து போலீசார்

Added : மார் 22, 2020
Share
Advertisement

புதுச்சேரி: 'கொரோனா' வைரஸ் பாதிப்பில் இருந்து தற்கொத்துக் கொள்ள, கை கழுவுவதன் அவசியம் குறித்து போக்குவரத்து போலீசார், பிரதான சிக்னல்களில் செயல்விளக்கம் அளித்தனர்.புதுச்சேரியில் 'கொரோனா' வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பல்வேறு துறையினர் எடுத்து வருகின்றனர். அந்த வகையில், போக்குவரத்து போலீசார் புதிய முயற்சியை மேற்கொண்டனர். பிரதான சாலை சந்திப்புகளில், போக்குவரத்து சிக்னலுக்காக பொதுமக்கள் காத்திருக்கும் சில நொடிகளில், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.அதில், எப்படி கை கழுவ வேண்டும் என்பதை விளக்கும் வகையில், பாதசாரிகள் கடக்கும் ஜீப்ரா கோட்டில் வரிசையாக நின்று, செயல்விளக்கம் அளித்தனர்.ராஜா தியேட்டர் சிக்னலில், இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையிலான போலீஸ் குழுவினர் செயல்விளக்கம் அளித்து, பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இதேபோல், முருகா தியேட்டர் சிக்னலில், சப் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி தலைமையில் 10 காவலர்கள், கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.கை கழுவுவதன் அவசியம் குறித்து செயல் விளக்கம் அளித்து, துண்டுபிரசுரங்களை வினியோகித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X