இந்தியா

பொது மக்கள் குறைகளை 'வாட்ஸ் ஆப்'பில் தெரிவிக்கலாம்

Added : மார் 22, 2020
Share
Advertisement

புதுச்சேரி: கொரோனா தொற்று பரவுவதை தடுக்க, பொது மக்கள் தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகளை, 'வாட்ஸ் ஆப் மூலம், வரும் 31ம் தேதி வரை தெரிவிக்கலாம்' என தெரிவிக்கப் பட்டுள்ளது.இதுகுறித்து, முதல்வர் நாராயணசாமி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா வைரஸ் எளிதாக பரவுவதற்கு முக்கிய காரணியாக விளங்குவது, அதிக அளவில் மக்கள் ஒன்று கூடுவதாகும்.எனவே, அதனை தவிர்க்கும் பொருட்டு, மக்கள் ஒன்றுகூட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதிக அளவில் மக்கள் கூடும் இடங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டுள்ளன.பொதுமக்கள் தங்கள் குறைகள், கோரிக்கைகளை தெரிவிக்க முதல்வர், அமைச்சர்களை சந்திக்க சட்டசபைக்கு தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளனர். இது கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட ஏதுவாகும்.எனவே, இந்த அசாதாரணமான நிலையை கருத்தில் கொண்டு, தவிர்க்க இயலாத சூழ்நிலையில் பொதுமக்கள் உடல் நலன் கருதி, தங்களின் குறைகள், கோரிக்கைகளை முதல்வரிடம் தெரிவிக்க நேரில் வராமல், 93453- 75069 என்ற தொலைபேசி எண்ணிற்கு வாட்ஸ் ஆப் மூலமாக தெரிவிக்கலாம்.இந்த ஏற்பாடு, வரும் 31ம் தேதி வரை தொடரும். இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X