ஒற்றை யானையால் தொல்லை: விவசாயிகளுக்கு தீரவில்லை  கவலை| Dinamalar

ஒற்றை யானையால் தொல்லை: விவசாயிகளுக்கு தீரவில்லை  கவலை

Added : மார் 22, 2020
Share
பேரூர்:விளைநிலங்களை தொடர்ந்து சேதப்படுத்தி வரும், ஒற்றை காட்டு யானையால், விவசாயிகள் பெருத்த நஷ்டத்தை சந்திக்கின்றனர்.தொண்டாமுத்துார் ஒன்றியத்துக்கு உட்பட்ட நரசீபுரம், மோளப்பாளையம், வடிவேலாம்பாளையம், மத்திபாளையம், பூலுவப்பட்டி கிராமங்களில், ஒரு மாதத்துக்கு மேலாக, ஒற்றை காட்டு யானையின் நடமாட்டம் உள்ளது. அது, விளைநிலங்களுக்குள் அடிக்கடி புகுந்து சேதத்தை
 ஒற்றை யானையால் தொல்லை: விவசாயிகளுக்கு தீரவில்லை  கவலை

பேரூர்:விளைநிலங்களை தொடர்ந்து சேதப்படுத்தி வரும், ஒற்றை காட்டு யானையால், விவசாயிகள் பெருத்த நஷ்டத்தை சந்திக்கின்றனர்.தொண்டாமுத்துார் ஒன்றியத்துக்கு உட்பட்ட நரசீபுரம், மோளப்பாளையம், வடிவேலாம்பாளையம், மத்திபாளையம், பூலுவப்பட்டி கிராமங்களில், ஒரு மாதத்துக்கு மேலாக, ஒற்றை காட்டு யானையின் நடமாட்டம் உள்ளது. அது, விளைநிலங்களுக்குள் அடிக்கடி புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.நேற்று முன்தினம் இரவு, மத்திபாளையத்தை சேர்ந்த சந்திரன், 48, என்பவரது தோட்டத்துக்குள் புகுந்தது. அங்கிருந்த தென்னை மரங்களை முறித்து உண்டது. பின், அரசாணி, தக்காளி, கொள்ளு பயிர்களை சேதப்படுத்தியது. விவசாயிகள் இணைந்து யானையை விரட்டினர். நேற்று காலை வந்த மதுக்கரை வனத்துறையினர், சேதம் குறித்து ஆய்வு செய்தனர்.அதன்பின், மலையாடிவாரத்தில் நின்று கொண்டிருந்த யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். விளைநிலங்களை தொடர்ந்து சேதப்படுத்தி வரும், ஒற்றை யானையை அடர் வனத்துக்குள் விரட்ட வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X