இந்தியா

சீன மக்களைபோல தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்: நாராயணசாமி

Added : மார் 22, 2020
Share
Advertisement

புதுச்சேரி: 'பொதுமக்கள் மாநில அரசோடு ஒத்துழைக்க வேண்டும். சீனாவில் மக்கள் வெளியே வராமல் எப்படி கொரோனாவை கட்டுப்படுத்தினார்களோ அதுபோல, புதுச்சேரி மக்களும் கடைபிடிக்க வேண்டும்' என, முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

முதல்வர் நாராயணசாமி அளித்த பேட்டி:கொரோனா நோயின் தாக்கம் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது என்பதை கருத்தில் கொண்டு, அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதன் ஒரு நடவடிக்கையாக, ஞாயிற்றுக் கிழமையான இன்று காலை 7.00 முதல் இரவு 9.00 மணி வரை, அனைத்து தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வியாபார நிறுவனங்கள், மதுக்கடைகள் மூடப்படும். மக்கள் நடமாட்டம் முழுவதுமாக தவிர்க்கப்படும்.பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 31ம் தேதி வரை வெளி நடமாட்டத்தை தடுக்க வேண்டும். 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக வெளியில் நடமாடக் கூடாது.அத்தியாவசிய வேலை தவிர மற்ற நேரங்களில், குறிப்பாக சுப நிகழ்ச்சிகள், துக்க நிகழ்ச்சிகளில்கூட குறைவான நபர்களே கலந்து கொள்ள வேண்டும்.ஆரோவில்லில் இருந்து புதுச்சேரிக்கு வரும் வெளிநாட்டினரை கண்காணிப்பதில் சிக்கல் இருப்பதால், மார்ச் 14ம் தேதியில் இருந்து வெளிநாட்டினர் ஆரோவில்லுக்கு வரக் கூடாது என தடை விதிக்கப் பட்டுள்ளது. இ.சி.ஆரில் ஆரோவில் - சின்ன முதலியார்சாவடி சந்திப்பில், மருத்துவக் குழுவினர், வெளிநாட்டினரை கண்காணித்து பரிசோதிக்க நமது கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார்.பொதுமக்கள் சாதாரண உடல்நல பிரச்னைக்கு, அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். அரசு மருத்துவக் கல்லுாரி, பொது மருத்துவமனைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.மாவட்ட கலெக்டர், சுகாதாரம், வருவாய், ஆஷா திட்ட பணியாளர்கள், அங்கன்வாடி தொழிலாளர்கள், ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து பணிபுரிய உள்ளனர்.கும்பலாக கூடுவதை தவிர்க்க வேண்டும். தொழிற்சாலை உரிமையாளர்களுக்கும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டினரை கண்காணித்து சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக கொரோனா பாதிப்பு இதுவரை இல்லை. மாகியில் கொரோனா நோய் தொற்று உள்ளவருக்கு மூன்றாவது முறையாக உமிழ் நீர் சோதனை செய்ததில் குணமாகவில்லை என தெரிய வந்தது. எனவே தனிமை வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.பொதுமக்கள் மாநில அரசோடு ஒத்துழைக்க வேண்டும். சீனாவில் மக்கள் வெளியே வராமல் எப்படி கொரோனாவை கட்டுப்படுத்தினார்களோ அதுபோல, புதுச்சேரி மக்களும் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் நாராயணசாமி கூறினார்.அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்அரசு அலுவலகங்களில் முதல் வாரத்திற்கு 50 சதவீத பணியாளர்களும், அடுத்த வாரத்திற்கு மீதமுள்ள 50 சதவீத பணியாளர்களும் வரவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் தயவு செய்து தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X