பொது செய்தி

தமிழ்நாடு

காலிபிளவர் சாகுபடி திண்டுக்கல்லில் அசத்தல்: திண்டுக்கல் தோட்டக்கலையில் அசத்தல்

Updated : மார் 22, 2020 | Added : மார் 22, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 காலிபிளவர் சாகுபடி திண்டுக்கல்லில் அசத்தல்: திண்டுக்கல் தோட்டக்கலையில் அசத்தல்

திண்டுக்கல்:திண்டுக்கல் காய்கறி மகத்துவ மையத்தில் 'ஆப்' சீசனிலும் இஸ்ரேல் தொழில் நுட்பத்தில் காலிபிளவரை தோட்டக்கலை துறையினர் சாகுபடிசெய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் காய்கறி மகத்துவ மையத்தில் பாலி, நெட் ஹவுஸ், பசுமை குடில், நிலப்போர்வை அமைத்து இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் வளர்த்து தோட்டக்கலை துறையினர் அசத்தியுள்ளனர்.சாதாரணமாக ஒரு ஏக்கரில், 7 டன் காலிபிளவர் மகசூல் கிடைக்கும். மற்ற பயிர்களை விட, காலிபிளவரில் புழுக்கள் அதிகம் இருக்கும். இதனால் ஏற்படும் மகசூல் இழப்பை தவிர்க்க முடியாது.ஆனால், பூச்சி புகா நிழல் வலை குடில் அமைக்கும் போது எளிதில் பூச்சிகள் உள்ளே நுழையாது. ஒரே மாதிரியான சீதோஷ்ண நிலை இருக்கும்.
சொட்டுநீர் பாசனம், நிலப்போர்வை அமைத்தல், நீர்வழி உரமிடுதல் போன்ற இஸ்ரேல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் புழு, பூச்சி தாக்குதல் இருக்காது.நடவு செய்து ஒரு முறை மட்டும் மருந்து தெளித்தால் போதும். அதன் பிறகு பூச்சி தாக்குதல் இருக்காது. மகசூல் இழப்பும் ஏற்படாது. இதன் மூலம் ஒரு ஏக்கரில், 12 டன் வரை சாகுபடி செய்யலாம்.ஒரு ஏக்கரில் பூச்சி புகா நிழல் வலை குடில் அமைக்க, 4 லட்சம் ரூபாய் வரை செலவாகும். இதற்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது.இம்முறையில் 'ஆப் சீசன்' நேரத்திலும் காலிபிளவரை சாகுபடி செய்ய லாம் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
22-மார்-202007:04:46 IST Report Abuse
Loganathan Kuttuva நாம் நன்றி சொல்லவேண்டியது இஸ்ரேல் விவசாயிகளுக்கு தான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X