இந்தியா

கோவில்களில் கணக்கு தணிக்கை இந்து முன்னணி வலியுறுத்தல்

Added : மார் 22, 2020
Share
Advertisement

காரைக்கால்: கோவில்களில் ஆண்டுதோறும் கணக்கு தணிக்கை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இந்து முன்னணி வலியுறுத்தி உள்ளது.இதுகுறித்து, காரைக்கால் மாவட்ட இந்து முன்னணி தலைவர் விஜயன் முதல்வரிடம் அளித்துள்ள மனு:சென்னை உயர்நீதிமன்றம் கோவில்கள் சம்பந்தமாக சமீபத்தில் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், கோவில்களில் பணியாற்றும் அரசு அதிகாரிகள். ஊழியர்கள். பணியாளர்கள் உட்பட அனைவரும் நான் ஹிந்து என, மூலவர் சன்னதி முன்பு உறுதிமொழி ஏற்று அதற்கான படிவத்தில் கையெழுத்திட்டு 8 வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.இந்நிகழ்ச்சியில் கோவிலில் அறங்காவலர் குழு தலைவரோ, நிர்வாக அதிகாரியோ உடன் இருக்க வேண்டும் என கூறியுள்ளது. இத்தீர்ப்பு புதுச்சேரி மாநிலத்திற்கு பொருந்தும் என்பதால், இந்த உத்தரவை காரைக்காலில் உள்ள அனைத்து இந்து கோவில்களிலும் அமல்படுத்த வேண்டும்.மேலும், பல கோவில்களில் பல ஆண்டுகளாக கணக்கு தணிக்கை நடைபெறாமல் உள்ளது. இது மிகப்பெரிய ஊழலுக்கு வழிவகுக்கும். இந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் கணக்கு தணிக்கை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X