பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் பட்டியல் வெளியீடு நிறுத்திவைப்பு: உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போக வாய்ப்பு

Added : மார் 22, 2020
Share
Advertisement

கோவை:'கொரோனா' முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.உலகை அச்சுறுத்தி வரும் 'கொரோனா' வைரஸ், தமிழகத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு அலுவலகங்கள் மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களிலும் பணிகள் முடங்கியுள்ளன. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அரசு அலுவலகம் வரும்படி பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இந்நிலையில், கடைசி கட்டத்தில் இருந்த தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள், 'கொரோனா' முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு பணிகளை காரணம் காட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.ஊரக உள்ளாட்சி தேர்தல், கடந்தாண்டு டிச., மாதம் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. இவற்றுக்கான ஓட்டுச்சாவடி பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டது. வார்டு வாரியான வாக்காளர் பட்டியல், கடந்த, 20ம் தேதி வெளியிடப்பட இருந்தது. ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்த ஆணையம் தயாராக இருந்தது.தற்போது அரசு அலுவலர்கள் 'கொரோனா' விழிப்புணர்வு பணியில் இருப்பதால், மறுதேதி குறிப்பிடாமல், வாக்காளர் பட்டியல் வெளியீடு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், தேர்தலும் தள்ளிப்போவது உறுதியாகியுள்ளது. இதில், அதிகம் பாதிக்கப்படுவது, வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் தான்.உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுவதாக, அரசு உச்சநீதிமன்றத்தில் உறுதி அளித்தபோது, வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயார் செய்து வைத்திருந்தனர். அதன்பின், பார்லி., தேர்தலில் பயன்படுத்திய வாக்காளர் பட்டியல் அடிப்படையில், உள்ளாட்சிக்கு வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டது.அப்போதும் தேர்தல் நடத்தப்படாத நிலையில், இந்தாண்டு ஜனவரியில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் அடிப்படையில் வார்டு வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் நிலை ஏற்பட்டது. அதை தயார் செய்திருந்த நிலையில், 'கொரோனா' பிரச்னை வந்து விட்டது. நோய் தொற்று ஓய்வதற்குள், புதிதாக மீண்டும் வார்டு வாக்காளர் பட்டியல் தயார் செய்ய வேண்டிய சூழல் வருமோ என, அலுவலர்கள் சலித்துக் கொண்டனர்.இயந்திரங்கள் தயார்கோவை மாவட்டத்தில், கோவை மாநகராட்சி, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை நகராட்சிகள், 37 பேரூராட்சிகள் உள்ளன. இதில், மாநகராட்சிக்கு மேயர், கவுன்சிலர், நகராட்சி, பேரூராட்சிக்கு, சேர்மன், கவுன்சிலர் என, ஒவ்வொரு வாக்காளரும் தலா, 2 ஓட்டு அளிக்க வேண்டும். இதற்கென, மின்னணு ஓட்டு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி முடிந்த நிலையில், 'கொரோனா' விழிப்புணர்வு பணி வந்து விட்டதாக, அலுவலர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X