பொது செய்தி

தமிழ்நாடு

தபால் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்

Added : மார் 22, 2020
Share
Advertisement

கோவை:மேற்கு மண்டல அளவிலான தபால் ஓய்வூதியர் சார்ந்த குறைதீர் கூட்டம், ஆர்.எஸ்.புரம், மேற்கு மண்டல தலைமை தபால் அலுவலகத்தில், வரும் ஏப்., 24ல் நடக்கிறது.கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், நீலகிரி, சேலம் உட்பட, மேற்கு மண்டத்துக்கு உட்பட்ட, 11 தபால் கோட்டங்களுக்கான, 'பென்ஷன் அதாலத்' எனப்படும், ஓய்வூதியர் சார்ந்த தபால் குறைதீர் கூட்டம், வரும் ஏப்., 24ல் கோவையில் நடக்கிறது.ஆர்.எஸ்.புரம்., மேற்கு மண்டல தலைமை தபால்நிலையத்தில், காலை, 11:00 முதல் நடக்கும் குறைதீர் கூட்டத்தில், தபால் மூலம் ஓய்வூதியம் பெறும் வாடிக்கையாளர்கள் கலந்துகொள்ளலாம். இதில், தங்களது புகார்கள் மற்றும் ஆலோசனைகளை, வாடிக்கையாளர்கள் நேரிடையாக, தபால் அதிகாரியிடம் தெரிவிக்கலாம்.நேரில் வர முடியாதவர்கள், தங்களது புகார்களை, வரும், மார்ச், 31க்குள், 'தபால் தலைவர், மேற்கு மண்டலம், ஆர்.எஸ்.புரம், கோவை - 641 002' என்ற முகவரிக்கு தபாலில் அனுப்பலாம். அனுப்பும் புகார்களில், ஓய்வூதியம் தொடர்பான முழுமையான விவரங்கள் இடம் பெற வேண்டும் என, தபால் துறை தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X