பொது செய்தி

தமிழ்நாடு

ஓய்வூதியருக்கு ஈட்டுப்படி தமிழக அரசுக்கு கோரிக்கை

Added : மார் 22, 2020
Share
Advertisement

கோவை:தமிழ்நாடு தொழிலாளர் துறை ஓய்வூதியர் நல அமைப்பு கோவை மண்டல தலைவராக, சேகர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.இவ்வமைப்பின் நிர்வாகிகள் கூட்டம், கோவை ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் உள்ள, ஆர்.எச்.ஆர்., அரங்கில் நடந்தது. கோவை மண்டலத்துக்கு உட்பட்ட, கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களை சேர்ந்த சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.அமைப்பின் கோவை மண்டல தலைவராக சேகர், துணை தலைவர்களாக, தாகிர்அலி, மல்லீஸ்வரன், செயலாளராக சந்திரன், இணை செயலாளர்களாக அமிர்தகலாவதி, மதிவாணன், பொருளாளராக சந்திரசேகரன் உட்பட செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.பணியில் உள்ள அரசு பணியாளர்களுக்கு வழங்கப்படும் வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படி உள்ளிட்டவற்றை, ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X