இந்தியா

சமூக வலைதளங்களில் போலியான தகவல்கள் பகிர்வு பரிசோதனை செய்தவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை

Added : மார் 22, 2020
Share
Advertisement

புதுச்சேரி: 'ஜிப்மர் மருத்துவமனை யில் பரிசோதனை செய்யப்பட்ட அனைத்து நபர்களுக்கும் கொரோனா' வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால், இது தொடர்பாக சமூக வலைதளங்களில் போலியான தகவல்கள் பகிரப்படுகின்றன' என, தெரிவிக்கப் பட் டுள்ளது.ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:ஜிப்மர் மருத்துவமனை, 'கோவிட் 19' எனப்படும் கொரோனா தொற்று நோய்க்கான அனைத்து மருத்துவ பரிசோதனைகள், சிகிச்சை முறைகள், அது சார்ந்த வசதிகளை நோயாளிகளுக்கு உடனுக்குடன் அளிக்க கடமைப்பட்டுள்ளது. ஜிப்மரில் அதற்குரிய அனைத்து வசதிகளும் இந்திய அரசின் விதிமுறைக்கு ஏற்ப செயல் படுத்தப்பட்டுள்ளது.நோய் தொற்று பரவாமல் தடுக்கவும், மருத்துவமனை வளாகத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், இந்திய அரசின் அறிவுரைக்கிணங்க கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், சமூக வலைதளங்களில் 'கோவிட் 19' தொற்று தொடர்பாக போலியான விவரங்கள் பகிரப்படுகின்றன.இந்த போலியான தகவல்களில் சித்தரிக்கப்பட்ட நோயாளிகளின் பெயர், வீட்டு விலாசம், அவர்களின் புகைப்படம் ஆகியவற்றுடன், ஜிப்மரில் 'கோவிட்-19' தொற்றுடன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் முற்றிலும் போலியானவை மட்டுமின்றி, சட்ட விரோதமானவை.ஜிப்மரில் நேற்று மாலை வரை பரிசோதனை செய்யப்பட்ட அனைத்து நபர்களுக்கும் 'கோவிட்-19' தொற்று இல்லை என்பது உறுதி செய்யப் பட்டுள்ளது.நோயாளிகளின் பெயர், அவர்களின் மருத்துவ விவரங்கள் அடங்கிய தனிப்பட்ட உரிமைகளை காப்பது ஜிப்மரின் கடமையாகும். எந்த சூழ்நிலையிலும் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களை தவிர வேறு எவருக்கும் நோயாளிகளின் பரிசோதனை விவரங்கள் பகிரப்பட மாட்டாது. இந்த அறிவிப்பு பொது மக்கள் மற்றும் நோயாளிகளிடம் கோவிட் 19 தொற்று சம்பந்தமாக தேவையற்ற குழப்பங்களை தவிர்ப்பதற்காக வெளியிடப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X