பொது செய்தி

தமிழ்நாடு

'அரசு கட்டணம் செலுத்த ஆறு மாத அவகாசம்' :லாட்ஜ் உரிமையாளர்கள் வேண்டுகோள்

Added : மார் 22, 2020
Share
Advertisement

நாகர்கோவில்:'கொரோனா' பீதி காரணமாக லாட்ஜ், ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளதால் அரசு கட்டணங்களை செலுத்த ஆறு மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கன்னியாகுமரி லாட்ஜ், ஓட்டல் உரிமையாளர், வியாபாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இச் சங்க கூட்டம் தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. கொரோனா பீதி காரணமாக ஓட்டல், லாட்ஜ்கள் மூடப்பட்டுள்ளதால் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. உரிமையாளர்களும், வியாபாரிகளும், தொழிலாளர்களும் ஒரு போல பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கடை வாடகை, மின் கட்டணம், வங்கி கடன் போன்றவற்றை திருப்பி கட்ட அரசு ஆறு மாத கால அவகாசம் வழங்க வேண்டும். கன்னியாகுமரி வருபவர்களை கொரோனா பரிசோதனைக்கு பின் அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X