இந்தியா

மூன்று மருந்து கடைகளில் 2,883 முக கவசங்கள் பறிமுதல்; அதிக விலைக்கு விற்றதால் நடவடிக்கை

Added : மார் 22, 2020
Share
Advertisement

புதுச்சேரி; அதிக விலைக்கு விற்பனை செய்த மூன்று மருந்து கடைகளில் இருந்து 2883 முக கவசங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்க மருந்தக கட்டுப்பாட்டுத் துறைக்கு பரிந்துரைக் கப் பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக கிருமி நாசினி, முக கவசம் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை அதிக விலைக்கு விற்கக் கூடாது என சுகாதாரத் துறை, எடையளவு துறை எச்சரிக்கை விடுத்திருந்தன.ஆனாலும் சிலர் தொடர்ந்து அதிக விலைக்கு விற்று வருவதாக பொது மக்கள் புகார் கூறினர்.அதன்பேரில், எடையளவுத் துறை அதிகாரிகள் விஜயரங்கம், குமார் ஆகியோர் தனியார் மருந்தகங்களில் நேற்று திடீர் ஆய்வு நடத்தினர். அதில், புதுச்சேரி வி.வி.பி. நகர், அம்பலத்தடையார் மடம் வீதி, பாரதி வீதி ஆகிய இடங்களில் உள்ள மூன்று மருந்தககங்களில் முக கவசங்கள் அதிக விலைக்கு விற்றது தெரியவந்தது.இதையடுத்து, மூன்று மருந்தகங்களிலிருந்து 2,883 முக கவசங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.இந்த மருந்தகங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, மருந்தக கட்டுப்பாட்டு துறைக்கு, சட்டமுறை எடை அளவைத் துறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரி தயாளன் பரிந்துரை செய்துள்ளார்.எடையளவு துறை அதிகாரிகள் கூறுகையில், 'கலெக்டர் உத்தரவின்படி மருந்து கடைகளில் ஆய்வு நடத்தப்படுகிறது. முக கவசத்தை கூடுதல் விலைக்கு விற்பது தண்டனைக்குரிய குற்றமாகும். மீறுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் இது தொடர்பான குறைபாடு களை, தட்டாஞ்சாவடி யில் உள்ள எடை யளவை கட்டுப்பாட்டு அதிகாரி அலுவலகத்தை 0413-2252847, 2253462 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X