பொது செய்தி

தமிழ்நாடு

கால மாற்றத்தை எதிர்கொள்ள திறன் அவசியம்: நாளை உலக வானிலை தினம்

Added : மார் 22, 2020
Share
Advertisement

கோவை:உலக வானிலையியல் நிறுவனம், மார்ச், 23ம் தேதியை (நாளை), உலக வானிலை தினமாக கொண்டாடி வருகிறது. இந்தாண்டுக்கான மைய கருத்தாக, 'காலநிலையும் நீரும்' என்ற தலைப்பை அறிவித்துள்ளனர்.சர்வதேச வானிலையியல் நிறுவனம், 1873ம் ஆண்டு, ஆஸ்திரியா நாட்டின் வியன்னா நகரில் நடந்த கருத்தரங்கில் உருவாக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 1950, மார்ச், 23ல் உலக வானிலையியல் நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது.அதன் தோற்றத்தை நினைவு கூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும், மார்ச், 23ம் நாள், உலக வானிலை தினமாக கொண்டாடப்படுகிறது. உலக நாடுகளின் ஒட்டுமொத்த வானிலை, வளர்ச்சி மற்றும் மேம்பாடு, நீரியல் நிர்வாக ஆய்வுகள், சுற்றுச்சூழல், காலநிலை மற்றும் நீர் ஆதாரங்கள் குறித்து சர்வதேச நாடுகளின் எல்லைகளை கடந்து, இந்நிறுவனத்தால் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.இந்தாண்டு, மார்ச், 23 உலக வானிலை தினம் மற்றும் மார்ச், 22ல் கொண்டாடப்படும் உலக நீர் தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் அமைப்பு, காலநிலையும் நீரும் என்ற கருப்பொருளை தலைப்பாக கொடுத்துள்ளது.இவ்விரு காரணிகளும், மாறி வரும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கும் இயற்கை சீற்றத்தால் ஏற்படும் விளைவுகளை குறைப்பதற்கும் மிக உதவியாக உள்ளன.குறைந்து வரும் நீராதாரங்களால், குடிமக்கள் ஒவ்வொருவரும் தண்ணீரை சிக்கனமாக உபயோகப்படுத்துவது இக்கால கட்டத்தில் முக்கியமானது. இக்கருத்துக்களை அடிப்படையாக கொண்டு, கோவை வேளாண் பல்கலையில் இயங்கி வரும் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம், இந்திய வானிலை ஆய்வு மையத்துடன் இணைந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.தமிழகத்தில் ஒவ்வொரு வட்டாரத்துக்கும் காலநிலையை கணித்து, விவசாயிகளுக்கு பயனுள்ள பரிந்துரைகளை வழங்கி வருகிறது. மாறி வரும் காலநிலையை எதிர்கொண்டு, வருங்காலங்களில் பயிர் மற்றும் கால்நடை உற்பத்தி பெருக்கத்துக்கான வழிவகைகளை மேற்கொண்டு வருவதாக, இம்மைய தலைவர் ராமநாதன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X