இந்தியா

இன்று மக்கள் ஊரடங்கு

Added : மார் 22, 2020
Share
Advertisement

புதுச்சேரி: 'மக்கள் ஊரடங்கில் கலந்து கொள்ளும் பணியாளர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்யக்கூடாது' என தொழிலாளர் துறை அறிவுறுத்தியுள்ளது.இதுகுறித்து தொழிலாளர் ஆணையர் மற்றும் செயலர் வல்லவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பிரதமர் நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள செய்தியில், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் சூழ்நிலையை கட்டுப்படுத்த, இன்று (22ம் தேதி) காலை 7:00 முதல் இரவு 9:00 மணி வரை, தனி நபர்கள் கூடுவதை தவிர்த்து, 'மக்கள் ஊரடங்கு' கடைபிடிக்க அறிவுறுத்தி உள்ளார்.இதனையொட்டி, அனைத்து தரப்பு மக்களும் தனித்திருக்க முன் வந்துள்ளனர். இதனால், எந்த விதமான போக்குவரத்து வசதிகளும் இருக்காது. தொழிற்சங்கங்களும் மக்கள் ஊரடங்கை கடைபிடிக்க முடிவு செய்துள்ளனர்.எனவே, தொழிலாளர்கயும் பணியாளர்களையும் இன்று தங்களின் பணிகளை செய்யச்சொல்லி கட்டாயப்படுத்தாமல், அவர்களின் வீடுகளில் இருந்து மக்கள் ஊரடங்கில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.மேலும், மக்கள் ஊரடங்கில் கலந்து கொள்ளும் தொழிற்சாலை, கடை மற் றும் நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் பணிக்கு வர இயலாத காரணத்தினால், எவ்விதமான சம்பள பிடித்தமும் செய்யக் கூடாது என்று உரிமையாளர்களை கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X