பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா முக கவசம் தயாரிப்பு பணி தீவிரம்:மகளிர் சுய உதவிக்குழுவினர் 'விறுவிறு'

Added : மார் 22, 2020
Share
Advertisement
 கொரோனா முக கவசம் தயாரிப்பு பணி தீவிரம்:மகளிர் சுய உதவிக்குழுவினர் 'விறுவிறு'

தஞ்சாவூர்:டெல்டாவில் மகளிர் சுய உதவிக்குழு மூலம், கொரோனா பரவாமல் தடுக்கும் முக கவசம் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது.
கொரோனா பரவுவதை தடுக்க முக கவசம் தேவை என்பதால், தற்போது அதற்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி மெடிக்கல்களில் அதிக விலைக்கு முக கவசம் விற்கின்றனர். இந்நிலையில் மக்களுக்கு எளிதாக முக கவசம் கிடைக்கும் வகையில், தமிழகத்தின் பல மாவட்டங்களில், மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு முக கவசம் தயாரிக்க பயிற்சி அளித்து, அதை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில், 23 குழுவினரும், திருவாரூர் மாவட்டத்தில், 15 குழுவினரும், நாகை மாவட்டத்தில், 10 குழுவினரும், நிரந்தர மற்றும் ஒரு முறை பயன்படுத்தும் முகக்கவசம் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். நாள் ஒன்றுக்கு, 10 ஆயிரம் முதல், 15 ஆயிரம் வரை முக கவசம் தயாரிக்க துவங்கி உள்ளனர்.
இங்கு தயாரிக்கப்படும் முக கவசம் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும். அதன் தொடர்ச்சியாக பொதுமக்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X