சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டாக்டர் போல் நடித்து பணம் பறித்தவர் கைது

Added : மார் 22, 2020
Share
Advertisement
 டாக்டர் போல் நடித்து பணம் பறித்தவர் கைது

கோவை:டாக்டர் போல் நடித்து, வாடகைக்கு குடியிருந்த, வீட்டின் உரிமையாளரிகளிடம், பணம் பறித்த நபரை, போலீசார் கைது செய்தனர்.கோவை, ஒண்டிப்புதுார், கண்ணன் நகரை சேர்ந்தவர் மனோகரன்; கட்டடம் கட்டும் ஒப்பந்ததாரர். இவரது மனைவி கண்ணம்மாள், 41. இவர்களுக்கு சொந்தமாக உள்ள வீடுகளை, வாடகைக்கு விட்டுள்ளனர். மூன்று மாதத்துக்கு முன், காலியாக இருந்த இவர்களது வீட்டில் தியாகராஜன், 38 என்பவர் குடி வந்தார். வந்ததில் இருந்து, அவர் வாடகை தரவில்லை.கண்ணம்மாள், வாடகை கேட்டபோது, வீடு குறித்து குறை கூறியதோடு, அவரை திட்டியும் வந்துள்ளார். சில நாட்களுக்கு முன் நடந்த பிரச்னையில், கண்ணம்மாளை தகாத வார்த்தைகளால் திட்டிய தியாகராஜன், அவரை தாக்கியுள்ளார். சிங்காநல்லுார் போலீசார், தியாகராஜனை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், இதேபோல் பலரிடம் மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது.போலீசார் கூறுகையில், 'தியாகராஜன், ஆறு மாதத்துக்கு ஒரு முறை வீட்டை மாற்றிக் கொண்டே இருப்பார். வாடகை வீட்டுக்குச் செல்லும்போது டாக்டர், தனியார் நிறுவன ஊழியர் என கூறியுள்ளார். வீடுகளில் குடியேறியதும் மூன்று முதல், ஆறு மாதங்கள் வரை வாடகை தராமல் ஏமாற்றுவார். வீட்டு உரிமையாளர் வாடகை குறித்து கேட்கும்போது, அவருடன் தகராறில் ஈடுபட்டு, பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளார். இதுவரை, 10க்கும் மேற்பட்ட வீடுகளில் குடியிருந்துள்ள தியாகராஜன் ரூ.3 லட்சம் வரை பணம் பறித்துள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X