பொது செய்தி

தமிழ்நாடு

சந்தேகம் சந்தேகமா வருது மக்களுக்கு

Added : மார் 22, 2020
Share
Advertisement
 சந்தேகம் சந்தேகமா வருது மக்களுக்கு

கோவை:கோவை கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு மையத்துக்கு, 70 அழைப்புகள் வந்துள்ளன; 'கொரோனா' சார்ந்து பல்வேறு சந்தேகங்கள் கேட்டு பதிவாகியுள்ளன.'கொரோனா' வைரஸ் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பொதுமக்களுடன் நேரடி தொடர்பில் இருக்கும் வகையிலும், கோவை கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். 1077 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'நேற்று மதியம், 2:00 மணி வரை, 70 அழைப்புகள் பதிவாகியுள்ளன. நேற்று முன்தினம் ஒரே நாளில், 34 அழைப்புகள் பதிவாகின. சளி, இருமல் இருக்கு; 'கொரோனா' என்பதை எவ்வாறு உறுதி செய்ய முடியும். எங்கு ஆய்வு செய்ய வேண்டும் என்பன போன்ற சந்தேகங்கள் கேட்டு அழைத்துள்ளனர்.'வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்ல, கோவையில் ஒரு குடும்பம் திட்டமிட்டு, டிக்கெட் உள்ளிட்ட அனைத்தும் முன்பே தயார் செய்துள்ளனர். 'கொரோனா' பாதிப்பையும் மீறி சுற்றுலா செல்ல தயாரானது குறித்த புகார் பதிவானது; அக்குடும்பத்தை அணுகி, சுற்றுலா செல்வதை தடுத்துள்ளோம். பள்ளி, தொழில்நிறுவனங்கள் சார்ந்த புகார்கள், அந்தந்த துறை அதிகாரிகள் வசம் உடனடியாக தெரிவிக்கப்படுகிறது' என்றார்.உதவி மையம்!இதேபோல், உதவி மையமும் அமைக்கப்பட்டு, கலெக்டர் அலுவலகம் வருபவர்கள், அலுவலர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. நுழைவாயில் முதல் வளாகம் முழுவதும் விழிப்புணர்வு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. பிரத்யேகமாக 'டிவி' வைக்கப்பட்டு வீடியோ மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். கலெக்டர் அலுவலகத்துக்குள், கை கழுவிய பின்னரே அலுவலர்கள் உட்பட அனைவரும் அனுமதிக்கப்படுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X