இந்தியா

புதுச்சேரியில் நாளை முதல் 144 தடை உத்தரவு அமல்

Added : மார் 22, 2020
Share
Advertisement
 புதுச்சேரியில் நாளை முதல் 144 தடை உத்தரவு அமல்

புதுச்சேரி: 'கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், புதுச்சேரியில் நாளை முதல், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும்' என முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

அவர் நேற்று அளித்த பேட்டி:கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், புதுச்சேரியில் 23ம் தேதி (நாளை) காலை முதல், வரும் 31ம் தேதி வரை, பொது இடங்களில் கும்பலாக கூடுவதற்கு தடை விதிக்கும் வகையில், 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் அனைத்தும் வழக்கம்போல திறந்திருக்கும். தொழிற்சாலைகள் செயல்படும். பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூட வேண்டாம்.வெளி மாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு வருகின்ற வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட உள்ளது. தமிழகத்தில் இருந்து நுாற்றுக்கணக்கான வாகனங்களில் திண்டிவனம், இ.சி.ஆர்., விழுப்புரம், கடலுார் வழியாக புதுச்சேரிக்கு வருகின்றனர். வரும் 31ம் தேதி வரை, இவ்வாகனங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், முழுமையான கட்டுப்பாடு இல்லை.ஏனென்றால் சிலர் விழாக்கள், குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருவார்கள். இப்படி வருபவர்கள் தவிர்க்க வேண்டும். அத்தியாவசியத்திற்கு மட்டும் புதுச்சேரிக்கு வரவேண்டும் என வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X