தமிழ்நாடு

தனித்திரு; விழித்திரு! இன்று ஒரு நாள் வெளியே வராதீங்க'கொரோனா'வை விரட்டி அடிப்போம்

Updated : மார் 22, 2020 | Added : மார் 22, 2020
Share
Advertisement
 தனித்திரு; விழித்திரு! இன்று ஒரு நாள் வெளியே வராதீங்க'கொரோனா'வை விரட்டி அடிப்போம்

'கொரோனா' வைரஸ் பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இன்று ஒரு நாள் சுய ஊரடங்கை பின்பற்றுவோம். 'கொரோனா'வை விரட்டி அடிப்போம்.உலக அளவில், 'கொரோனா' வைரசால் பலியானவர்கள் எண்ணிக்கை, 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 2.75 லட்சத்தை எட்டியுள்ளது. நமது நாட்டிலும், அத்தகைய பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, இன்று (ஞாயிறு) ஒரு நாள் காலை, 7:00 முதல், இரவு, 9:00 மணி வரை, சுய ஊரடங்கு கடைபிடிக்க, பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.கோவையில் இன்றைய தினம் பஸ்கள், ஆட்டோக்கள், ரயில்கள் ஓடாது; கம்பெனிகள் இயங்காது; வர்த்தக நிறுவனங்கள்; கடைகள் திறக்கப்பட மாட்டாது. பெட்ரோல் பங்க்குகளும் இரவு வரை செயல்படாது; அத்தியாவசிய தேவைக்கு மட்டும் சில பங்க்குகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அனைத்து விதமான இயக்கங்களும் நிறுத்தப்படும்.வீட்டை விட்டு வெளியே வராதீர்கள். எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நம் நகரம் ஓய்வெடுக்கட்டும். ஓடி ஓடி உழைத்து களைத்த உங்களுக்கும், மனதுக்கும்
இந்நாள் ஓய்வாக இருக்கட்டும்.பொழுதுபோகாமல், போரடிக்கும் என சொல்லலாம். காலையில் எழும் நேரம் கூட தாமதமாக இருக்கட்டும். செய்தித்தாள்களை, வார இதழ்களை முழுமையாக படியுங்கள். குடும்பத்தினருடன் பேசி மகிழுங்கள். குழந்தைகளுடன் விளையாடுங்கள். அடுத்த வீட்டு, பக்கத்து வீடுகளில் வசிப்போருடன் பேச வேண்டுமெனில், மூன்றரை அடி தள்ளி நின்று உரையாடுங்கள். குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருடைய நலனும், இத்தருணத்தில் முக்கியம்.
'குழந்தைகள், வயதானவர்கள் வெளியே செல்ல வேண்டாம்' என்பதை எடுத்துச் சொல்லுங்கள். 'கொரோனா' பாதிப்பை தவிர்க்க, புதிய உணவு பழக்கத்தை வகுத்துக் கொள்ளுங்கள். பழக்கங்களை மாற்றிக் கொள்ள திட்டமிடுங்கள். வயதானவர்கள் இருந்தால், அவர்களது உடல் நலத்தை உறுதி செய்யுங்கள். இன்னும் துாய்மையாக இருக்க கற்றுக்கொடுங்கள். அடிக்கடி சோப்பு போட்டு கை கழுவ வேண்டும் என்பதை சொல்லுங்கள். உணவு பொருள் சாப்பிடும் முன், இதை கண்டிப்பாக பின்பற்றுங்கள்.
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகளை சாப்பிடவும். குப்பையை அகற்றுங்கள்; படிந்துள்ள துாசுகளை வெளியேற்றுங்கள். வீட்டில் உள்ளோருக்கு சாதாரணமாக கூட, தும்மல், இருமல், சளி, காய்ச்சல் வராமல் தடுப்போம். உலகத்தையே அச்சுறுத்தும் 'கொரோனா'வை தடுக்க, ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை செலுத்த வேண்டும்; அதுவே, சுய பாதுகாப்பு!ஏழையாக இருந்தாலும், பணக்காரராக இருந்தாலும் இந்த தற்காப்பு வழியில் மட்டுமே 'கொரோனா'வை கொல்ல முடியும். ஒன்றுபட்டு அல்ல, தனித்திருந்து, விழிந்திருந்து, 'கொரோனா'வை துடைத்தெறிய சபதமேற்போம். வீட்டை விட்டு வெளியே செல்லாமல், ஊரடங்கை முழுமையாக கடைபிடிப்போம்.- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X