இந்தியா

கடற்கரை சாலை 31ம் தேதி வரை மூடல்

Added : மார் 22, 2020
Share
Advertisement

புதுச்சேரி: கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக, புதுச்சேரி கடற்கரை சாலை வரும் 31ம் தேதி வரை மூடப்படுகிறது.கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை புதுச்சேரி அரசு தீவிரமாக எடுத்து வருகிறது. பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள், மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் சுற்றுலா தலங்கள், மார்ச் 31ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன.பஸ் நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம் மற்றும் எல்லைப் பகுதிகளில் மருத்துவ குழுக்கள் அமைத்து, வெளி மாநிலத்தவர் தீவிர பரிசோதனைக்கு பிறகே புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.இந்நிலையில், கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால், சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்லும் கடற்கரை சாலையும் நேற்று மூடப்பட்டது.வரும் 31ம் தேதி வரை, கடற்கரை சாலை மூடப்படுவதாக போலீசார் ஒலி பெருக்கி மூலம் அறிவித்தனர். இதனால் கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.கடற்கரை சாலை மூடப்பட்டது குறித்து முதல்வர் நாராயணசாமி கூறுகையில், 'கடற்கரை சாலையில் தினமும் காலை, மாலையில் ஏராளமானோர் வாக்கிங் செல்கின்றனர்.அவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவக்கூடும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X