பொது செய்தி

தமிழ்நாடு

ஆவின் பாலகங்கள் இன்று செயல்படும்

Added : மார் 22, 2020
Share
Advertisement

கோவை:'கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆவின் பாலகங்களும் வழக்கம்போல் இன்று செயல்படும்' என, கோவை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய (ஆவின்) தலைவர் ராஜு கூறியுள்ளார்.அவர், மேலும் கூறியதாவது:'கொரோனா' வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மக்கள் அதிகளவில் கூடுவதை தவிர்க்கும் வகையில், இன்று ஒரு நாள் மக்கள் ஊரடங்கை கடைபிடிக்க, பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.மக்கள் சிரமத்துக்குள்ளாகாத வகையில், பால், குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய, மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆவின் பாலகங்களும் வழக்கம்போல், இன்று, 24 மணி நேரமும் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.மாவட்ட சுகாதாரத்துறை, மாநகராட்சி மற்றும் ஊராட்சி சுகாதாரப் பணியாளர்கள் ஒவ்வொரு பாலகத்தை சுற்றிலும், கிருமி நாசினி தெளிப்பர். மக்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில், பால் வினியோகத்துக்கு, கூடுதல் பணியாளர்கள் அமர்த்த வினியோகிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாலகங்களில் மற்ற பலகாரங்கள் இன்று விற்கப்படாது.இவ்வாறு, அவர் கூறினார்.ஆவின் விற்பனை பிரிவு மேலாளர் சங்கீதா கூறுகையில்,''ஆர்.எஸ்.புரம், சிவானந்தா காலனி, ராமநாதபுரத்தில் உள்ள மண்டல அலுவலகங்கள், 24 மணி நேரமும் செயல்படும். கிராமப்புறங்களில் உள்ள பாலகங்கள், அதிகாலை முதல் காலை, 7:00 மணி வரையும், மாலை, 4:00 முதல் இரவு, 9:00 மணி வரையும் செயல்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X